திருமங்கலம் : திருமங்கலம் பகுதிகளில் குதிரை வாலி பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்யும் பயிர்களை தட்டைகளில் இருந்து பிரிப்பதற்காக ரோடு முழுவதும் கொட்டி வைக்கின்றனர்.
வாகனங்கள் ஏறிச்செல்லும் போது தானியங்கள் தனியாக பிரிந்து வந்து விடும்.அதேசமயம் இலகு ரக வாகனங்கள் இதில் வழுக்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தட்டைகளில் இருந்து பயிர்களை தனியாக பிரித்து எடுத்த பின் கழிவுகளை ரோட்டோரம் கொட்டிச் செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம், துாசு ஏற்படுவதால் அந்த பகுதியை கடந்து செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும்.