பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து பரமக்குடி வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி சார்பில் தண்டோரா மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
தற்போது வைகை ஆற்றின் நீர்மட்டம் 61 அடியாக உள்ள நிலையில்,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட தேவைக்கு 3000 கனஅடி வீதம் நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப் பட்டது.முதல்கட்டமாக ராமநாதபுரத்திற்கு டிச., 6 வரை 1093 மில்லியன் கனஅடி திறக்கப்பட்டு உள்ளது. டிச. 7 முதல் 12 வரை சிவகங்கைக்கு 449 மில்லியன்கனஅடி திறக்கப் படவுள்ளது. மேலும் கால்வாய்கள் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் மற்றும் வைகை கரையில் வசிக்கும் மக்கள்பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பரமக்குடி நகராட்சி சார்பில் தண்டோரா மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.