உசிலம்பட்டி : -உசிலம்பட்டியில் பி.கே.எம்., இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளை, அக்னிச்சிறகுகள் அறக்கட்டளை சார்பில் காவல்துறை சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சியின் நிறைவு விழா நடந்தது.
அறக்கட்டளை தலைவர் சின்னன் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜா வரவேற்றார். துணைத்தலைவர் ஜெயச்சந்திரன், கள்ளர் கல்விக் கழக செயலாளர் பாண்டியன், பொருளாளர் வனராஜா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வர் ரவி, அக்னிச்சிறகுகள் ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் பங்கேற்றனர். ஆர்.டி.ஓ., ராஜ்குமார், போலீஸ் டி.எஸ்.பி., ராஜன் அரசு தேர்வு, நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினர். அறக்கட்டளை செயலாளர் ஜெயராஜ் நன்றி கூறினார்.