மேலுார் : மேலுார் நகராட்சியில் மூன்று வார்டுகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
நகராட்சி சிவகங்கை ரோடு 23 வது வார்டிலுள்ள போர்வெல் மூலம் 18, 20, 22 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மலம்பட்டி நான்கு வழிச்சாலை அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதங்களாக குடிநீர் வீணாகிறது. கழிவுநீரும் குடிநீரில் கலக்கிறது.நகராட்சி பொறியாளர் ரத்தினவேல் கூறுகையில்,''குடிநீர் வீணாவது சரி செய்யப்படும்,'' என்றார்.