கீழக்கரை : கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரைப்பகுதிகளான காஞ்சிரங்குடி, ஏர்வாடி, மாயாகுளம், களிமண்குண்டு, பெரியபட்டினம், திருப்புல்லாணி, சேதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் புரெவிப்புயல் முன்னெச்சரிக்கையை முன்னிட்டு ஆய்வு நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, ஆயத்தீர்வை அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ், கீழக்கரை தாசில்தார் வீரராஜ் உட்பட வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். தாழ்வான பகுதிகளில் உள்ள கிராம மக்களை புயல்காப்பகம், சமுதாயக்கூடங்களில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர்.