கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வலைச்சேரிபட்டியில் தென்னை மரங்களில் வெள்ளை நிற பூச்சிகள் பரவ துவங்கியுள்ளதால் கருக துவங்கியுள்ளன.
தென்னை மரங்களில் உள்ள வெள்ளை நிற பூச்சிகள் காற்றில் பறந்து அருகிலுள்ள மரங்களின் கீற்றுகளின் அடிப்பகுதியில் 45 நாட்கள் தங்கி சத்துக்களை உறிஞ்சுவதால் மரங்கள் கருகி வருகின்றன. நோய் தாக்குதலால் இப்பகுதியை சேர்ந்த அழகுமுருகன், முருகன், நல்லதம்பி, சண்முகம், பிச்சை உள்ளிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாயி அழகுமுருகன் கூறியதாவது: இப்பகுதியில் ஐயாயிரம் மரங்களில் இலை, பாலை, குரும்பை, இளநீர், தென்னை மட்டைகள் கருகி விட்டன. கடன் வாங்கி விவசாயம் செய்யும் நிலையில் தென்னை மரங்கள் பட்டு போனதால் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளது, என்றார்.
வேளாண் உதவி இயக்குனர் மதுரைசாமி கூறுகையில்,'' பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்துகளும், மருந்து அடிக்க மானிய விலையில் இயந்திரங்களும் வழங்கி வருகிறோம்,'' என்றார்.