ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, உச்சிபுளி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ராமநாதபுரம் வாலந்தரவை மகேந்திரன்30,கோவை காளீஸ்வரன்28, ஆகியோரை உச்சிபுளி போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக தப்பமுயன்ற மகேந்திரன் கீழே விழுந்து காயம்அடைந்ததால் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் மீது திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் வழிப்பறி, ஆடு திருட்டு என 30க்குமேற்பட்ட வழக்குகள் உள்ளன.இந்நிலையில்ராமநாதபுரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட் ஜெனிதா மருத்துவமனைக்கு சென்று மகேந்திரனிடம் விசாரித்தார். அதன்பின்இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.