திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய மலர்கள் மகத்துவ முன்மாதிரி ஆராய்ச்சி திடலில் காய்கறி நாற்றுக்கள், பூச்செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இத்திடலை தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் ஆய்வு செய்தார். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மையத்தை தகவல் மற்றும் விழிப்புணர்வு மையமாக மாற்ற ஆலோசனை வழங்கினார். துணை இயக்குனர் ரேவதி, உதவி இயக்குனர் பேபி, துணை அலுவலர் பாஸ்கர்ராஜா உடன் சென்றனர்.