உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் 'சமுதாய சேவை வழியிலான வாழ்க்கை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.கல்லூரி முதல்வர் ரவி வரவேற்றார். தலைவர் பாலகிருஷ்ணன், தாளாளர் பாண்டியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துணை முதல்வர் ஜோதிராஜன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மதுரை காமராஜ் பல்கலை சமூகவியல்துறை பேராசிரியர் ராஜ்குமார் பேசினார்.