முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பயிரிட்டுள்ள நெற்பயிர் நன்கு விளைச்சல் அடைந்த நிலையில் பூச்சிகள் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முதுகுளத்துார் மற்றும் கீழக்காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, ஏனாதி, துாரி, பேரையூர், அப்பனேந்தல்,கீழத்துாவல் உட்படஅதனை சுற்றியுள்ள கிராமங்களில் 1000 ஏக்கருக்கும் அதிகமாக நெற்பயிர்கள் பயிரிட்டுள்ளனர். கடந்த சிலநாட்களாகவே மழைபெய்ததால் நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.நெற்பயிர்களை பூச்சி தாக்கி அடியோடு அழித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயி காளிதேவன் கூறியதாவது: மழைபெய்ததால் நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து கதிர்விடும் தருவாயில் உள்ளது.
தற்போது பயிர்களில் பூச்சி தாக்குவதால் கொத்து கொத்தாக சாய்ந்து பயிர் அழிந்து வருகிறது. எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு பயிர்களில் பூச்சிகள் தாக்கி வருவது வேதனை அளிக்கிறது, என்றார்.