மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரேயுள்ள செல்லம் ஏஜன்சீஸ் பெட்ரோல் பங்கில்அளவு குறைவாக பெட்ரோல் நிரப்பியதாக வாடிக்கையாளர் ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.'ரூ.300க்கு பெட்ரோல் நிரப்ப சொன்னால் நீங்கள் ரூ.225க்கு 'கட்' செய்து விட்டீர்கள், ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள், என்னை போல் எத்தனை பேரை ஏமாற்றுவீர்கள்' என வீடியோவில் அந்த வாடிக்கையாளர் பேசுகிறார். இதனை தொடர்ந்து அந்த பங்க் 15 நாட்கள் வரை செயல்பட, விற்பனையில் ஈடுபடக்கூடாது என இந்தியன் ஆயில் நிறுவனம் தடை விதித்துள்ளது.