உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை ஊராட்சியில் கிராமப்புற நுாலகம் அமைந்துள்ள இடத்தின் அருகே பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறு உள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு 15 ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் உள்ளது. மேலும் மூடப்படாமல் திறந்தவெளியாக உள்ளது.கிராம மக்கள் கூறியதாவது:பயன்பாடில்லாத, மூடப்படாத ஆழ்துளை கிணற்றால் விபத்து அபாயம் உள்ளது. இந்த போர்வெல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையேல் விபத்தை தவிர்க்க மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.