கொட்டாம்பட்டி : சென்னை எண்ணுார் முதல் துாத்துக்குடி வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) சார்பில்திரவ இயற்கை எரிவாயு கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி வழியாக இக்குழாய் அமைக்கப் படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளில் ஒரு பிரிவினர் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி முடிவு செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர்.மற்றொரு பிரிவினர் கருங்காலக்குடியில் ஆர்.டி.ஒ., ரமேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஐ.ஓ.சி., நிறுவன மேலாளர் சரவணன் நில இழப்பீடு உள்ளிட்ட திட்ட பணிகளை விளக்கினார். பல விவசாயிகள் இழப்பீடு தொகைக்குரிய காசோலைகளையும் பெற்றனர்.