போலீஸ் செய்திகள்... போலீஸ் செய்திகள்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
05:49

புகையிலை விற்றவர் கைதுகள்ளிக்குடி: கே.வெள்ளாகுளம் ரத்தினசாமி 76, கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வந்தார். அவரை கள்ளிக்குடி போலீசார் கைது செய்தனர்.கஞ்சா கடத்தியவர் கைதுசிந்துபட்டி: போலீசார் பி.மேட்டுப்பட்டியில்ரோந்து சென்ற போது, டூவீலரில் சென்ற மதுரைசெல்லுார் பாண்டியை 43, சோதனையிட்டனர். அவர் கஞ்சா கடத்தியது தெரிந்தது. கைது செய்த போலீசார் 2 கிலோ 100 கிராம் கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.மறியலில் ஈடுபட்டவர்கள் கைதுமேலுார்: மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் கண்ணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட் முன் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.



உசிலம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட மகளிரணிதலைவி இந்துராணி, செயற்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு உள்ளிட்ட 38, கருமாத்துாரில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 47 பேர் கைது செய்யப்பட்டனர்.சிறுமிக்கு திருமணம்: மூவர் மீது வழக்குதிருமங்கலம்: மயிலாடும்பாறையை சேர்ந்த 17 வயது சிறுமியை பெற்றோர் மதுரை பெருங்குடி சக்திவேலுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருப்பரங்குன்றம் ஊர் நல அலுவலர் முத்துலட்சுமி புகாரின்படி சக்திவேல், மீனாட்சி, ஆறுமுகம் மீது திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்குமதுரை: செக்கானுாரணி இன்ஸ்பெக்டர் அனிதா. வழக்கு ஒன்றில் பெயர்களை நீக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மின்சாரம் தாக்கி சிறுவன் பலிசோழவந்தான்: பரவை சத்தியமூர்த்திநகர் அம்மாசி. இவரது பேரன் சாந்தனு 8, நேற்று திருவாலவாயநல்லுாரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். 'டிவி' ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.லாரி மோதி ஒருவர் பலிபாலமேடு: சரந்தாங்கி தொத்தன் 57, நேற்று டூவீலரில்(ஹெல்மெட் அணியவில்லை) மனைவி சாரதா 48, உடன் நத்தம் நோக்கி சென்றார். ஆசிரமம் அருகே எதிரே வந்த லாரி மோதியது. தொத்தன் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X