பரமக்குடி : பரமக்குடியில் தி.மு.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மாநில மகளிர்அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முன்னிலை வகித்தார். முதுகுளத்துார், எஸ்.காரைக்குடி, கொளுந்துரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் சரவணகுமார், துணை செயலாளர் துரைவினோத், பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.