திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 'கற்போம் எழுதுவோம்' பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க பெண்கள் பலர் ஆர்வம் காட்டினர்.
அனைவரும் அடிப்படை கல்வி அறிவு பெறும் நோக்கில், மத்திய அரசு 'கற்போம் எழுதுவோம்' திட்டம் கொண்டு வந்துள்ளது. திண்டுக்கல்லில் 2801 ஆண்கள், 8404 பெண்கள் என 11 ஆயிரத்து 205 பேருக்கு எழுத, படிக்கும் வகையில் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நேற்று 561 மையங்களில் துவங்கியது.மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியை பத்மாவதி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் முருகேசன் துவக்கினார். தலைமையாசிரியை ஜெயந்தி பிளாரன்ஸ் திட்டத்தை விளக்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் அனுஷா, சித்ரா பங்கேற்றனர்.அதிகளவில் பெண்கள் பங்கேற்றனர். முதல் நாளில் கையெழுத்து போட கற்றுக்கொடுக்கப்பட்டது. தன்னார்வலர் ஜெயா நன்றி கூறினார்.