ஆர்.எஸ்.மங்கலம் : பெரிய கண்மாயை துார்வார வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ., சார்பில், அனைத்துக் கட்சினர் கலந்து கொண்ட விவசாயிகளின் போராட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் நுார் ஜியாவுதீன் தலைமை வகித்தார்.
திருவாடானை தொகுதி தலைவர் அபுல்கலாம் ஆசாத், மாவட்ட துணை செயலாளர் முஹமது சுலைமான், பொது செயலாளர் பரக்கத் அலி முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை துார்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும்.வைகை தண்ணீரை பெரிய கண்மாய்க்கு கொண்டு வர வேண்டும். உரத்தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். நெல் கொள்முதல் அமைத்து விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பூவாணிப்பேட்டையில் இருந்து அனைத்து கட்சியினர் ஊர்வலமாக சென்று, தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா, முன்னாள் யூனியன் தலைவர்கள் நல்லசேதுபதி, வ.து.ந.ஆனந்த், எஸ்.டி.பி.ஐ., நகர் தலைவர் ரிஸ்வான் பங்கேற்றனர்.