திண்டுக்கல் : 'பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படாது' என, முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜூ தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: தபால் துறையில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தபால் சேமிப்பு கணக்கை சுயமாக நிர்வகிக்கும் 18 வயது வரையுள்ள மைனர் குழந்தைகளுக்கு ஏ.டி.எம்., டெபிட் கார்டு வழங்குவது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அனுப்பப்பட்டது. இந்நிலையில் பெற்றோர் இயக்கினாலும், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சுயமாக நிர்வகித்தாலும் அவர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு ஏ.டி.எம்., மற்றும் டெபிட் கார்டு வழங்கப்படாது என இயக்குனரகம் தெரிவித்துள்ளது என, தெரிவித்தார்.