உத்தரகோசமங்கை : கொம்பூதி ஊராட்சி தலைவராக இருந்தவர் கண்ணுச்சாமி 60, உடல்நலம் பாதிப்பால் நவ., 29ல் இறந்தார். திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட 33 கிராம ஊராட்சித் தலைவர்கள் இணைந்து இறந்த கொம்பூதி ஊராட்சித் தலைவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தனர்.ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் லதா வெள்ளி, செயலாளர் கோகிலா, பொருளாளர் கவிதா, ஒருங்கிணைப்பாளர் இளையபாரதி, நிர்வாகிகள் கணேஷ், செந்தமிழ்செல்வி,சக்திவேல் உட்பட ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.