வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே கன்னிமார்சமுத்திரம் கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
எம். குரும்பபட்டியில் கன்னிமார்சமுத்திரம் கண்மாய் பல ஆண்டுகளாக வறண்டு உள்ளது. மருதாநதி, ஆத்துார் ராஜவாய்க்கால் பாசனத்தின் உபரி நீர் கண்மாயாக உள்ளது. மருதாநதி பாசனத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிறைந்த பிறகு, உபரி நீர் வரும்போது இக்கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடுவர்.தற்போது மழை பெய்து மருதாநதி அணை தண்ணீரை கண்மாய்களுக்கு திறந்து விடுவதால் இக்கண்மாயையும் நிரப்ப வேண்டும் என குரும்பபட்டி, பூசாரிபட்டி கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இக்கண்மாய் நிரம்பினால் சுற்றியுள்ள 150 ஏக்கர் பாசன வசதி பெறும். குடிநீர் திட்டங்களுக்கு நீரூற்று கிடைக்கும்.