கமுதி : விருதுநகர் மாவட்டம் கீளுர் கிராமத்தை சேர்ந்த கோமதி பரளச்சி கிராமத்தில் பத்திரப்பதிவிற்காக டூவீலரில் வந்தார்.
டூவீலரில் எதிரே வந்த 2 பேர் கோமதி கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்து சென்றனர். கமுதி போலீசார் பஸ் ஸ்டாண்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது டூவீலரில் வந்த 2 பேர் நிற்காமல் சென்றனர்.எஸ்.ஐ.,முருகநாதன் தனிப்பிரிவு போலீஸ் முருகபூபதி, கார்த்திக் ஆகியோர் கமுதி எட்டுக்கண் பாலம் அருகே 2 பேரையும் பிடித்தனர். உச்சிப்புளியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சூர்யா 23, சண்முகராஜ் மகன் யுவஸ்ரீதர் 20, கைது செய்து பரளச்சி போலீசிடம் ஒப்படைத்தனர்.