திண்டுக்கல் : திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி மாணவர்கள் சர்வதேச கணித 'ஒலிம்பியாட்' போட்டியில் சாதனை படைத்தனர்.
நாடு முழுவதும் நடந்த இப்போட்டியில் திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி முதல் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ்குமார், அகிலேஷ், ஹாசினி தங்கம் வென்றனர். இதே வகுப்பை சேர்ந்த மாணவர் மதன் வெண்கலம், அஸ்வின்குமார் மற்றும் மிரித்திகா மண்டல அளவில் தங்கம் வென்றனர்.மாணவர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியைகள் நிஷாந்தி, பிரியதர்ஷினியை, பள்ளிச் செயலர்கள் மங்களராம், காயத்ரி, முதன்மை முதல்வர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர் வித்யா பாராட்டினர்.
ஆசிரியைகள் பிரியதர்ஷினி, அறிவியல் ஆசிரியை இலக்கியப்பிரியாவுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, அசோக்குமார், பிரபா, மணிமேகலை, ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பாளர் விமலா, மேலாளர் பிரபாகரன் பாராட்டினர்.