வடமதுரை : வடமதுரையில் நடந்த ரோடு விபத்தில் ஜார்கண்ட் மாநில வாலிபர் பலியானார்.
இங்குள்ள தனியார் மில்லுக்கு ஆட்களை வேலைக்கு சேர்க்கும் முகவராக ஜார்கண்ட் மாநிலம் சிங்கபம் மாவட்டம் கோச்ராவை சேர்ந்த அவினேஷ் பிரதான் 26, இருந்தார்.நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலம் சர்சராவை சேர்ந்த தொழிலாளி மனோஜ் பத்ரா 28, என்பவரை வடமதுரையில் இருந்து வேல்வார்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில்அழைத்துச் சென்றார். திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ஆண்டிமாநகர் பகுதியில் சென்டர் மீடியனில் மோதி விழுந்து இருவரும் காயமடைந்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவினேஷ்பிரதான் இறந்தார். மனோஜ் பத்ரா சிகிச்சையில் உள்ளார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.