சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழகமுதல்வர் பழனிசாமி வருகையால் விமோசனம் பிறந்துள்ளது.
டிச.4ல் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா ஆய்வு கூட்டத்திற்கு வருகை தருகிறார். இதுவரை கேட்பாரற்று கிடந்த கலெக்டர் அலுவலகம் தற்போது புதுபொலிவு பெற்று வருகிறது. அனைத்து சுவர்களிலும் வண்ணம் பூசப்படுகிறது. பராமரிப்பு இல்லாமல் இருந்த அலுவலக கூட்ட அரங்கில் மின்விளக்குகள்பொருத்தப்பட்டு அதிகாரிகள் அமர்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து அலுவலகம் வரை இருளில் இருந்தது.
உயர்கோபுர மின் விளக்குகள் உட்பட அனைத்து இடங்களிலும் விளக்குகள்பொருத்தப்பட்டு வருகிறது. இது வரை மழை நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது.தற்போது சுகாதார பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து மராமத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.