தாண்டிக்குடி : தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியில் 'பீன்ஸ்' சுக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
இம்மலைப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் முருங்கை, செலக்சன், புஷ் பீன்ஸ் நடவு செய்தனர். தொடர் மழையால் தாழ்வான பகுதியில் பயிரிட்ட செடிகளில் அழுகல் ஏற்பட்டு பூ, பிஞ்சுகள் உதிர்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது.அறுவடையாகும் பீன்ஸ் மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருச்சி மார்கெட்களில் கிலோ ரூ. 20 முதல் 35 வரை மட்டுமே விற்கிறது. ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் விலை ஆறுதல் அளிக்கும் என எண்ணினர்.ஆனால் சில்லரை விலையில் கிலோ ரூ. 60 முதல் 80 வரை விற்கப்படுகிறது. இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் உரியவிலை கிடைக்காத நிலை தொடர்கிறது. வேளாண் விற்பனை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.