சிவகங்கை : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறை, நேருயுவகேந்திரா, தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.விழிப்புணர்வு ஊர்வலத்தினை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து மருதுபாண்டியர் நகர் வரை முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பின் நடந்த நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் ரத்தினவேல், சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதாமணி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும்கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் குமணன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.