பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையத்தில் விவசாயிகள் பயன்பாட்டுக்காக கிராம நீர்வடி திட்ட கமிட்டி மற்றும் விவசாய உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தானியங்கி வானிலை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ் மையத்தை துவக்கி வைத்தார். அதன் செயல்பாடுகள் குறித்து நீர்வடி திட்ட கமிட்டி இயக்குனர் சக்திஜோதி பேசியதாவது:இம் மையத்திற்கென புதிய செயலி உருவாக்கி இப்பகுதியின் 400 விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர். இம்மையத்தில் சேகரிக்கப்படும் ஒவ்வொரு தகவலும் இணைய வழியாக ஒவ்வொரு விவசாயிடமும் சென்றடையும். காற்று அடிப்பது, மருந்து தெளிப்பது, காற்றில் ஈரத்தன்மை, வெயில், மழை குறித்த காலநிலை மாற்றங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.
நபார்டு வங்கி தலைமை பொதுமேலாளர் செல்வராஜ், 'இங்கு 25 கி.மீ., சுற்றளவில் விவசாயிகள் பயனடைய மேலும் 2 மையங்களை அமைக்க வேண்டும், என்றார்.