சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ஊழியரை மிரட்டிய ஊராட்சித்தலைவி கணவரை கண்டித்து ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவரிடம் கோவனுார் ஊராட்சித்தலைவி ேஹமலதாவின்கணவர் முருகன் ஊராட்சிக்கான 2 லட்சம் ரூபாய் செக் பெறுவதற்காக வந்துள்ளார். தாமதம் ஏற்பட்டதால் முருகன் ஊழியரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர்உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:ஊராட்சித் தலைவியின்கணவர் முருகன் ஊழியர்களை மிரட்டியுள்ளார் .
அலுவலகத்தில் பணி பாதுகாப்பு இல்லாததால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து ஊராட்சித்தலைவர்களின் உறவினர்கள் அலுவலகங்களில் தொடர்ந்து தலையிட்டு வருகின்றனர்.இதனை கண்டித்து பல முறை போராட்டங்கள்நடத்தியுள்ளோம். இது போன்ற நிலை நீடிக்க கூடாது என்பதால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.பழனியம்மாள், பி.டி.ஓ., தெரிவித்ததாவது:கோவனுார் ஊராட்சித்தலைவி கணவர் முருகனுக்கும், ஊழியருக்கும் இடையே செக் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு இரு தரப்பும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து ஒன்றிய சேர்மன் மஞ்சுளா சமரசம் பேசி வருகிறார், என்றார்.