நத்தம் : நத்தம் வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய நத்தம், ரெட்டியபட்டி மற்றும் செந்துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பருவத்தில் நெற்பயிருக்கு டி.15 வரையிலும், சோளம், துவரைக்கு டிச.16 வரையும், நிலக்கடலைக்கு ஜன.18 வரையும் காப்பீடு செய்யலாம். ரபி பருவத்தில் செந்துறையில் நெற்பயிறுக்கு மார்ச் 1 வரையிலும், நத்தம், செந்துறை விவசாயிகள் உளுந்துக்கு டிச.16 வரையும் காப்பீடு செய்யலாம்.வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொதுசேவை மையங்களில் வங்கி கணக்கு விவரம், சிட்டா, அடங்கல், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை பதிந்து இத்திட்டத்தில் சேரலாம்.
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.425.25, சோளத்துக்கு ரூ.124.50, துவரைக்கு ரூ.248.25, நிலக்கடலைக்கு ரூ.315.75, உளுந்து பயிருக்கு 228.46 பிரீமியம் செலுத்த வேண்டும். விபரங்களுக்கு நத்தம் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் முரளி தெரிவித்தார்.