வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு -- மதுரை ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வத்தலக்குண்டு போலீசார் சோதனை செய்ததில் பெங்களூரைச் சேர்ந்த 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடந்தது தெரிந்தது. இன்ஸ்பெக்டர் பவுலோஸ் லாட்ஜ் பணியாளர்கள், வத்தலக்குண்டு பொன்னுச்சாமி 35, அய்யம்பாளையம் சுரேஷ்குமார் 25, மற்றும் விபச்சார பெண்களை கைது செய்தார். பிரபு, இளங்கோ ஆகியோரைத் தேடி வருகின்றனர்.