போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
06:27

இருவர் தற்கொலைபுழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம், கங்கை அம்மன் கோவில் தெருவில் வசித்தவர் சதீஷ்குமார், 34; தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல், குடிபோதையில் வீட்டிற்கு சென்றார். அப்போது, கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சதீஷ்குமார், மனைவி பிரியாவை கண்மூடித்தனமாக அடித்தார். இதையடுத்து, வேட்டி மூலம், துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய கணவரை, அவரது மனைவி காப்பாற்றி, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை சதீஷ்குமார் உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.புழல்: செங்குன்றம், துரை அப்துல் வகாப் தெருவில் வசித்தவர் மசூத் அகமது, 25; கார் மெக்கானிக். அவர், பெண் ஒருவரை காதலித்துள்ளார். பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மனமுடைந்தவர், நேற்று முன்தினம் இரவு, கடையின் உட்பகுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.நகை பறித்த மூவர் பிடிபட்டனர்பெரவள்ளூர்: பெரம்பூர், பி.பி., சாலையைச் சேர்ந்தவர் ரத்னகுமார், 60. இவரது மனைவி சுபாஷினி, 54. அதே பகுதியில் உள்ள சுப்பிரமணியம் தெருவில், நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி சென்ற போது, இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர், சுபாஷினியின் 7 சவரன் செயினை பறித்து தப்பினர். செம்பியம் தனிப்படை போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், புளியந்தோப்பு, பி.எஸ்.மூர்த்தி நகரைச் சேர்ந்த அஜித் குமார், 19, வியாசர்பாடியைச் சேர்ந்த ஆகாஷ், 20, ராஜேஷ், 20, ஆகிய மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 7 சவரன் நகை, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மின்சாரம் தாக்கி காவலாளி இறப்புபூந்தமல்லி: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபு, 65; பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, நிறுவனத்திற்குள் ரோந்து சென்ற போது, புல் தரையில், அறுந்து கிடந்த மின் வடத்தை மிதித்த பாபு, மின்சாரம் தாக்கி, துாக்கி வீசப்பட்டார். மயக்கமடைந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரியவந்தது. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.ரவுடிகளுக்கு 'குண்டாஸ்'பெரியமேடு: ராயபுரத்தைச் சேர்ந்தவர் ரியாஸ், 34. இவரது கூட்டாளிகள், முகமது பயாஸ், 23, நஸ்ருதீன், 28. ரவுடிகளான இவர்கள் மூன்று பேர் மீது, மாதவரத்தில், டேங்கர் லாரி உரிமையாளரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கு உள்ளது. அதேபோல, வேங்கைவாசலைச் சேர்ந்தவர் சீனிவாசன், 24; ரவுடி. இவர் மீது, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு உள்ளது. இவர்கள் நான்கு பேரையும், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.வீட்டில் திருட முயன்றவர் சிக்கினார்அம்பத்துார்: அம்பத்துார் அடுத்த கொரட்டூர், அன்னை நகர், ஏ.வி.எஸ்., பிரதான சாலையில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று அதிகாலை, 3:30 மணி அளவில், பூட்டியிருக்கும் வீட்டில், ஆட்கள் நடமாட்டம் உள்ளதாக, சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த கொரட்டூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே நகை, பணம் திருட முயன்ற, வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்த சூர்யா, 20, என்பவர் சிக்கினார். போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.தீக்காயமடைந்த மூதாட்டி பலிகோட்டூர்புரம்: கோட்டூர்புரம், கருணாநதி, மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி, 75. கார்த்திகை தீபத்தன்று, வீட்டில் விளக்கு ஏற்றிக் கொண்டிருந்த போது, திடீரென மயக்கமடைந்து, ஏற்றி வைத்த விளக்கின் மீது விழுந்தார். இதில், தீக்காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.மாவா விற்ற இருவர் சுற்றிவளைப்புவண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, கிழக்கு கல்லறை சாலை, வீடு ஒன்றில், மாவா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதாக, நவ., 28ல், வண்ணாரப்பேட்டைபோலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சோதனையிட்ட போலீசார், போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட, கலா, 60, என்ற மூதாட்டியை கைது செய்து, 303 மாவா பாக்கெட் மற்றும், 50 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், மூதாட்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் படி, போதை பொருட்களை மொத்த வியாபாரம் செய்பவர்களை நோக்கி, தனிப்படை விரைந்தது. நேற்று முன்தினம் இரவு, தொடர்புடைய, சோழவரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், 40, அத்திப்பட்டு, புதுநகரைச் சேர்ந்த முத்து, 45, ஆகிய இருவரை கைது செய்தனர். நீரில் மூழ்கி முதியவர் மரணம்புழல்: புழல், காவாங்கரை, மகாவீர் கார்டன் பிரதான சாலையில் வசித்தவர் ஆசிர்வாதம், 95. அவர், நேற்று அதிகாலை, 5:00 மணி அளவில், வீட்டில் இருந்து வெளியே சென்றார். மதியம், 2:00 மணி வரை வீடு திரும்பவில்லை. அவரை, குடும்பத்தினர் தேடிய போது, மெர்சி நகரில், காலி மனையில், இரண்டு அடி ஆழத்திற்கு தேங்கிய மழைநீரில், குப்புற விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.98 ஆயிரம் 'அபேஸ்'திருவொற்றியூர்: திருவொற்றியூர், இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆர்த்தி, 46. இவரது மொபைல் போனுக்கு, ஆதார் மற்றும் பான் அட்டை 'அப்டேட்' செய்வதாக, குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. குறுஞ்செய்தியில் இருந்த, 'லிங்க்' வழியாக நுழைந்ததும், ஆதார் மற்றும் பான் கார்டின், பின் நம்பரை பதிவிட கோரியது. பதிவிட்டதும், ஓ.டி.பி., எண் ஒன்று வந்தது. ஓ.டி.பி., எண்ணை பதிவிட்டதும், வங்கி கணக்கில் இருந்து, 98 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகியது. அதிர்ச்சியடைந்த அப்பெண், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X