ஈரோடு: ரயில்வே ஸ்டேஷனில், பயணி தவறவிட்ட சூட்கேஸை, திரும்ப அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஈரோட்டில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் மனோஜ், 30; ஈரோட்டில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு, பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று முன்தினம் பயணித்தார். பிளாட்பார்ம் 1ல் உட்கார்ந்திருந்தபோது, சூட்கேசை மறந்து விட்டு ரயிலில் ஏறி விட்டார். ரோந்து சென்ற, ரயில்வே எஸ்.ஐ., முருகானந்தம், கேட்பாராற்று கிடந்த சூட்கேஸை எடுத்து வர, போலீசார் சோதனை செய்தனர். அதில், 20 ஆயிரம் ரூபாய், பல்வேறு உடமை இருந்தது. சூட்கேசை பாதுகாப்பாக வைத்தனர். தவறவிட்ட மனோஜ், புகாரளிக்க வந்தார். அவரிடம் விசாரணை நடத்தி, ஆவணங்கள் குறித்து கேட்டு, உறுதி செய்தபின், சூட்கேசை ஒப்படைத்தனர்.