ஈரோடு: ஈரோடு, திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மனுநீதி திட்ட முகாம் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மக்களிடம், 190 மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவி வழங்கி கலெக்டர் பேசியதாவது: மத்திய அரசு மூலம், ரேஷன் கடைகளில் விரைவில் துவரம் பருப்பு, கொண்டக்கடலை இலவசமாக வழங்க உள்ளனர். ரயாத்வாரி சட்டத்தின் கீழ், 20, 25 ஆண்டுகள் குறிப்பிட்ட நிலங்களில் வசிப்பவர்களுக்கு, பட்டா வழங்குவது தொடர்பான கணக்கெடுப்பு முடியும் நிலையில் உள்ளது. அவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.