ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 10 நான்கு சக்கர வாகனங்கள், 41 டூவீலர்கள் என, 51 வாகனங்கள், நாளை மறுதினம் (4ம் தேதி) காலை, 10:00 மணிக்கு, ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. அந்த வாகனங்களை இன்றும், நாளையும் பார்வையிடலாம். டூவீலருக்கு, 2,000 ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு, 4,000 ரூபாய் முன் பணம் செலுத்தினால் மட்டுமே, ஏலத்துக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு, 94860-33329 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.