சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்ட, அரசு புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில், 1988 முதல் நீதிமன்றம் இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் இல்லாதால், வாடகை கட்டடத்தில் செயல்படும் நிலை உள்ளது. தற்போது சத்தி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், தனியார் திருமணத்தில் செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டடம் கட்ட, இந்நிலையில், அத்தாணி சாலையில், கொமராபாளையம் அரசு மருத்துவ மருத்துவமனை அருகில், அரசு புறம்போக்கில் இரண்டு ஏக்கர் நிலம், நீதிமன்ற குடியிருப்புகளுக்கு தவளகிரி முருகன் கோவில் எதிரில், 4.96 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுமதி, சத்தி சார்பு நீதிபதி ஈஸ்வரமூர்த்தி ஆகியோர், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.