ரியல் எஸ்டேட் அலுவலகம் முற்றுகை: பெருந்துறை அருகே பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
09:35

சென்னிமலை: வீட்டு மனை விற்பதாக, பணம் பெற்ற நிலையில், கிரயம் செய்து கொடுக்காததால், ரியல் எஸ்டேட் அலுவலகத்தை, மக்கள் முற்றுகையிட்டனர்.


திருப்பூரை சேர்ந்தவர் புவனேந்திரன். இவர், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில், ஊத்துக்குளி சாலையில், ஸ்ரீகிருஷ்ணா பில்டர்ஸ் பெயரில், ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். சரளை, காசிலிங்க கவுண்டன்புதூர் மற்றும் குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி, செம்மாண்டம்பாளையம் பகுதிகளில், வீட்டு மனை விற்பதாக விளம்பரம் செய்தார். நூற்றுக்கணக்கானோர் தலா ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால், கிரயம் செய்து தராமல், ஓராண்டாக காலம் தாழ்த்தியுள்ளார். அதேசமயம் நில உரிமையாளருக்கும் உரிய தொகை தந்து, கிரயம் செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டு மனைக்கு பணம் கட்டிய, 30 பேர் விஜயமங்கலத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்றனர். அங்கிருந்த நவீன்குமார் என்பவர், புவனேந்திரன் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக தெரிவிக்கவே காத்திருந்தனர். ஆனால், 15 வக்கீல்கள் கார்களில் வந்து வரிசையாக இறங்கினர். காத்திருந்த மக்களிடம் தகராறு செய்து, அலுவலகத்தை விட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செய்வதறியாது திகைத்தனர். அதேசமயம் தாங்கள் வந்த கார்களை, அப்பகுதியில் கடை முன் நிறுத்திவிட்டு, எடுக்காமல் வக்கீல்கள் தகராறு செய்துள்ளனர். இதனால் கடைக்காரர்கள், அப்பகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வக்கீல்களை சுற்றி வளைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து, பெருந்துறை போலீசார் விரைந்தனர். முற்றுகையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, புகார் தந்தால், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த பிரச்னை தொடர்பாக, பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில், இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X