சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில், லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில், டிரைவர் காயமடைந்தார்.
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு, திம்பம் மலைப்பாதை வழியாக ஒரு லாரி நேற்று மதியம், 3:00 மணியளவில், மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் சென்றது. அதேசமயம், எதிரே, கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த லாரி மோதியது. பின் தொடர்ந்து வந்த மற்றொரு லாரி மோதியதால், சத்தியமங்கலத்தில் இருந்து சென்ற லாரியின் முன்புறம் சேதமடைந்தது. லாரி டிரைவரான கொள்ளேகாலை சேர்ந்த சிக்கண்ணா, 42, இடிபாடுகளில் சிக்கினார். வாகன ஓட்டிகள் லாரியின் அவரை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சத்தியமங்கலத்திலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, மாலை, 5:00 மணி அளவில் விபத்து ஏற்படுத்திய லாரிகள் நகர்த்தி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, போக்குவரத்து சீரானது. இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.