அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி, 66; விவசாயியான இவர், கருத்து வேறுபாட்டால், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மனைவியை பிரிந்து, தனியாக வசித்தார். கடந்த மாதம், 26ல் வீட்டில் இருந்து சென்றவர், அதன் பிறகு திரும்பவில்லை. அதே பகுதியில் ஒரு தோட்டத்துக் கிணற்றில் குருசாமி சடலம் நேற்று காலை மிதந்தது. அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர். வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியில், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.