கோபி: வேகத்தடையை அடையாளம் காட்டாததால், சிறுவலூரில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறுவலூர் நால்ரோடு முதல், கோபி சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கோபி சாலையில், பஞ்., ஆபீஸ் எதிரே செல்லும் சாலையில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு அடித்ததால் அழிந்து விட்டது. இதனால், அருகில் வந்த பிறகே, வேகத்தடை இருப்பது அறிந்து, வாகன ஓட்டிகள் தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளை பெயின்ட் அடித்து, அடையாளம் காட்ட, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.