மேட்டூர்: மேட்டூர் காவலர் பள்ளியில், 280 பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று மாலை நடந்த, பயிற்சி நிறைவு நாள் விழாவில், சேலம் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமை வகித்து பேசுகையில், 'பயிற்சி முடித்து செல்லும் பெண் போலீசார், மக்களிடம் கனிவாக பேச வேண்டும். கடுஞ்சொற்கள் கூடாது' என அறிவுறுத்தினார். இதில், பயிற்சி பள்ளி ஏ.டி.எஸ்.பி., அண்ணாமலை, போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.