ஆத்தூர்: ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில், வருவாய்த்துறை சார்பில், வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, நேற்று நடந்தது. அதில், ஆத்தூர் - 230, கெங்கவல்லி - 107, பெத்தநாயக்கன்பாளையம் - 135 என, 472 பயனாளிக்கு, 72.65 லட்சம் ரூபாய் மதிப்பில், இலவச வீட்டுமனை பட்டா, ஏழு பேருக்கு ரேஷன் கார்டுகளை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வழங்கினார். ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், தலைவாசலில், 222 பயனாளிக்கு பட்டா வழங்கப்பட்டது. மேலும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தில், 50 சதவீத மானிய விலையில், தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன.