பனமரத்துப்பட்டி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளையில், நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை செயலர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில், ராமநாதபுரம், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து, கண்மூடித்தனமாக செயல்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். அலுவலக கதவை அடைத்து, அரசு வாகனத்தை உதைத்த கும்பலை கைது செய்ய கோஷம் எழுப்பினர். பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்கள், அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர். அதேபோல், தாரமங்கலத்தில், மாவட்ட செயலர் ஜான்ஆஸ்டின் தலைமையிலும், ஓமலூரில், பி.டி.ஓ.,கள் கண்ணன், முருகேசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.