மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடியில், ஏகாபுரம் உழவர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு, நேற்று, திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் மணிமேகலாதேவி தலைமை வகித்து, கூட்டுப்பண்ணை திட்ட முக்கியத்துவம், விவசாயிகள் கூட்டாக இணைந்து, விவசாய இடுபொருட்களை வேளாண் மையத்தில் பெற்றுக்கொள்ள விளக்கமளித்தார். தொழில்நுட்ப மேலாளர் செல்வி, தீர்மான பதிவேடு, ரொக்க பதிவேடு, வரவு, செலவு பதிவேடு, கடன் பதிவேடு ஆகியவற்றை கையாள்வது குறித்து விளக்கமளித்தார். சங்ககிரி உதவி வேளாண் உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர், நுண்ணீர் பாசன திட்ட முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.