சேலம்: சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் உள்ள, 54 காலி பணியிடங்களுக்கு, 275 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு, லைன்மேடு மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தேர்வை, நேற்று, போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார். அதில், 128 ஆண், 10 பெண் உள்பட, 138 பேர் பங்கேற்றனர். உயரம், மார்பளவு, ஓட்டத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில், வெற்றி பெற்றவர்களுக்கு, 45 நாள் பயிற்சிக்கு பின் பணி ஒதுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.