சேலம்: தொற்று பரவல் இல்லாத மாவட்டமாக மாற்ற, விதிமீறும் நிறுவனங்கள், கடை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம், கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், கொரோனா பரவல் இல்லாத நிலையை உருவாக்க, தடுப்பு, பாதுகாப்பு, விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு, தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், நோய் தொற்று நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்டவை கடைப்பிடிப்பது அவசியம். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.