மேட்டூர்: தமிழக மின்வாரிய தலைவர், நான்கு நாள், தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.
தமிழக மின்வாரியத்தில், அங்கீகரிகப்பட்ட, 18 தொழிற்சங்கங்கள் உள்ளன. கடந்த, 30 முதல், அதன் நிர்வாகிகளை சந்திக்க, மின்வாரிய தலைவர், நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் முடிவு செய்தார். தொழிற்சங்க முக்கியத்துவம் கருதி, மரபுப்படி அழைக்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்கேற்ப, தொழிற்சங்கங்களை சந்திக்கும் நாளில், மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், டிச., 3(நாளை) மாலை, 3:00 மணிக்கு, தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் அமைப்பு உள்பட, நான்கு சங்கங்கள், 7ல், மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்கம் உள்பட, நான்கு சங்க நிர்வாகிகளை, மின்வாரிய தலைவர் சந்திக்க உள்ளார். டிச., 9ல், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் உள்பட, 5 சங்கங்கள், 10ல், பாரதீய மின் ஊழியர் உள்பட, 5 தொழிற்சங்க நிர்வாகிகளை சந்திக்கிறார்.