தலைவாசல்: புடலங்காய் விளைச்சல் பாதிப்பால், வரத்து சரிந்து, விலை உயர்ந்தது. சேலம் மாவட்டம், தலைவாசல், ஆத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், புடலங்காய் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. தற்போது, மழை, பனியால், அதன் கொடிகளில், பூக்கள் உதிர்தல், மகரந்தம் சேராமை, பூக்கள் கருகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு, தலைவாசல் மார்க்கெட்டுக்கு வரத்து சரிந்தது. குறிப்பாக, இரு வாரத்துக்கு முன், ஒரு டன் இருந்த நிலையில், தற்போது, அதற்கும் குறைவாகவே வரத்து உள்ளது. கடந்த வாரம், ஒரு கிலோ புடலை, 10 முதல், 12 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 22 முதல், 25 ரூபாய் வரை விற்பனையானது.