கெங்கவல்லி: ரவுடி மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கெங்கவல்லி, மீனவர் தெருவை சேர்ந்தவர் சுபாஷ், 38. இவர் மீது, கெங்கவல்லி, விழுப்புரம் மட்டுமின்றி, ஆத்தூர் மதுவிலக்கு ஸ்டேஷன்களில், கொலை, கொள்ளை, திருட்டு, சாராயம் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. 2016 முதல், ரவுடி பட்டியலில் உள்ளார். கடந்த நவ., 7ல், கெங்கவல்லி போலீசார், விஷம் சாராயம் விற்றபோது, சுபா?ஷ கைது செய்தனர். அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., தீபாகானிகேர், கலெக்டர் ராமனுக்கு பரிந்துரைத்தார். அதையேற்று, அவர் உத்தரவிட்டதால், நேற்று, சுபாஷ் மீது, குண்டாஸ் பாய்ந்தது. ஆத்தூர் ஊரக போலீசார், நேற்று, கல்லாநத்தம் ஏரியில் ஆய்வு செய்தனர். அப்போது, மரத்தின் அடியில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து, டம்ளர், தின்பண்டங்கள் வைத்து சந்துக்கடை நடத்தியது தெரிந்தது. மதுபானம் விற்ற, அதே ஊரைச் சேர்ந்த, மனோகரன், 52, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.