சேலம்: சேலம், கோரிமேடு, மாடர்ன் தியேட்டர் குடியிருப்பை சேர்ந்தவர் மதியழகன், 42. ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி இந்திராணி, 39. இவர், நேற்று முன்தினம் வீட்டின் பீரோவில் நகைகளை சரிபார்த்தார். அப்போது, நான்கு பவுன் தங்க காசு, மூன்று பவுன் ஆரம், 40 ஆயிரம் ரூபாய் மாயமானது தெரிந்தது. அவர் புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரணையில், வீட்டு வேலை செய்துவந்த, கன்னங்குறிச்சியை சேர்ந்த கல்பனா, 39, திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நகை, பணத்தை மீட்டனர்.