தர்மபுரி: தமிழகத்தில், நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக, அனைத்து மாவட்டங்களிலும், தமிழக சிறப்பு, டி.ஜி.பி.,ராஜேஸ்தாஸ் உத்தரவின்படி, போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்து வருகிறது. அதன்படி, தர்மபுரி வள்ளலார் திடலில், நேற்று காலை, 10:30 மணிக்கு, தர்மபுரி டி.எஸ்.பி., அண்ணாத்துரை தலைமையில், அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் நெசவாளர் காலனி, நான்கு ரோடு, மதிகோண்பாளையம் வழியாக வந்து, நான்கு ரோட்டில் முடிந்தது. அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடுவர்களை தடுத்து, கைது செய்யும் ஒத்திகை நடந்தது. இதில், டி.எஸ்.பி., ராஜாசோமசுந்தரம், பயிற்சி டி.எஸ்.பி., சூர்யா, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் உட்பட, 250 போலீசார் மற்றும் ஊர்காவல்படையின் கலந்து கொண்டனர்.
* அரூர், போலீஸ் ஸ்டேஷன் முன், நேற்று மாலை, 5:30 மணிக்கு, எஸ்.பி., பர்வேஷ்குமார் தலைமையில் துவங்கிய போலீஸ் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, சந்தைமேடு, நடேசா பெட்ரோல் பங்க், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நான்குரோடு, கச்சேரிமேடு வழியாக, மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் அருகே, 6:00 மணிக்கு நிறைவடைந்தது.